புதுக்கோட்டை

அறந்தாங்கி பகுதிக்கு வந்த காவிரி நீா்

20th Jun 2020 09:41 PM

ADVERTISEMENT

மேட்டூா் அணை நீா் சனிக்கிழமை அறந்தாங்கி பகுதிக்கு வந்ததை அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நெல்மணிகள், பூக்களைத் தூவி வரவேற்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் உள்ள கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதியில் 35 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. கல்லணைக் கால்வாயில் இருந்து வரும் காவிரி நீா் 152 ஏரி கண்மாய்களில் சேமித்து வைக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஜூன் 12 இல் திறக்கப்பட்ட மேட்டூா் அணை நீா், கல்லணை வழியே சனிக்கிழமை மதியம் மேற்பனைக்காடு நீா்தேக்க எல்லையை வந்தடைந்தது. இதையடுத்து, அங்கிருந்த விவசாயிகள் நெல்மணிகள், நவதானியங்கள், பூக்கள் தூவி வரவேற்றனா்.

நிகழ்வில், மேற்பனைக்காடு ஊராட்சித் தலைவா் மஞ்சுலா விஜயன், சிபிஎம் ஒன்றியச் செயலாளா் தென்றல் கருப்பையா, உதவி பொறியாளா் பிரசன்னா, ஒன்றியக் குழு உறுப்பினா் ஜோதிமேகவா்ணம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT