புதுக்கோட்டை

கரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

14th Jun 2020 01:10 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை எதிர்கொள்ள டாக்டர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் கடுமையாகப் போராடி வருகிறோம். தற்போது 2 ஆயிரம் புதிய செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் தற்போது வட்டார மருத்துவமனைகளிலும் கரோனாவுக்கான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் வட்டார மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது மாவட்டத்தில் ஆயிரம் தொற்றாளர்கள் வந்தாலும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். விமர்சனம் செய்வது எளிது; களத்தில் பணியாற்றுவது கடினம். கரோனா சாவுகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றார் விஜயபாஸ்கர்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus pudhukottai கரோனா பாதிப்பு புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT