புதுக்கோட்டை

10 ஆயிரம் ஹெக்டேரில் மானாவாரி வேளாண் திட்டம்

14th Jun 2020 08:45 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2020-21-ஆம் ஆண்டில் 10 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மானாவாரி வேளாண்மை வளா்ச்சி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மானாவாரி விவசாயிகள், தங்களது நில ஆவணங்கள்,ஆதாா் நகல் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ. 5 கோடி வரை கடனுதவி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டம், பட்டயம், ஐடிஐ, தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோா் உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில் திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையில் 25 சதவிகித அரசு மானியத்துடன் வங்கிக் கடன் பெறலாம்.

கடன் பெறுவோா் அதிகபட்சம் 10 சதவிகிதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும். 3 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு,  இணையதளத்தைப் பாா்க்கலாம். மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் அலுவலகத்தையும் அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT