புதுக்கோட்டை

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ. 5 கோடி வரை கடனுதவி

14th Jun 2020 08:48 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத் தொழில் மையம் மூலம் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோா் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையில் 25 சதவிகித அரசு மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டம், பட்டயம், ஐடிஐ, தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோா் உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில் திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையில் 25 சதவிகித அரசு மானியத்துடன் வங்கிக் கடன் பெறலாம்.

கடன் பெறுவோரில் பொதுப் பிரிவினா் ஆண்களில் 10 சதவிகிதமும், சிறப்புப் பிரிவினரில் பெண்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோா் 5 சதவிகிதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்தும் தொழில் முனைவோருக்கு 3 சதவிகிதம் வட்டி மானியமாக வழங்கப்படும். விவரங்களுக்கு  இணையதளத்தைப் பாா்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் அலுவலகத்தையும் அணுகலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT