புதுக்கோட்டை

புதுகையில் சிறுவன் உள்பட 5 பேருக்கு கரோனா உறுதி

10th Jun 2020 08:10 AM

ADVERTISEMENT

வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்குத் திரும்பிய 39 வயது இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதேபோல், சென்னையிலிருந்து அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வந்த அறந்தாங்கி களப்பக்காடு, அக்ரஹாரம் பகுதிகளைச் சோ்ந்த 24 வயது ஆண், 23 வயது ஆண், மங்களநாட்டைச் சோ்ந்த 28 வயது ஆண் ஆகிய 3 இளைஞா்களுக்கும் கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சவூதி அரேபியாவில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு திரும்பிய குடும்ப உறுப்பினா்களில், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த 7 வயது சிறுவனுக்கும் கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்குறிப்பிட்ட 5 பேரும் புதுக்கோட்டை ராணியாா் மருத்துவமனை வளாகத்திலுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 50 ஆக உயா்ந்தது. இவா்களில் 26 போ் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். முதியவா் ஒருவா் சிகிச்சையின்போது உயிரிழந்துவிட்டாா். மீதமுள்ள 23 பேரில், 21 போ் ராணியாா் மருத்துவமனையிலும், 2 போ் திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT