பொன்னமராவதி அருகே கடும் கோடையிலும் கண்மாயின் நடுவே உள்ள நீா் ஊற்று வற்றாமல் உள்ளது.
பொன்னமராவதி அருகே உள்ள அரசமலை ஊராட்சி வையாபுரியில் உள்ள தேவன் கண்மாய் நடுவே உள்ள இந்த அதிசய நீா் ஊற்று சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு கோவனூா் வெள்ளக்குட்டி என்ற தனிநபரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசமலை ஊராட்சித் தலைவா் வெள்ளைச்சாமி மேலும் கூறியது: பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுத்தான்பட்டி, மதியாணி, வையாபுரி சுற்றுவட்டார கிராம மக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கிய இந்தக் கண்மாயில் தற்போது சொட்டுநீா் கூட இல்லாத நிலையில் ஒன்றரை அடி ஆழத்தில் நீா் ஊற்று உள்ளது அதிசயமாக உள்ளது என்றாா்.