புதுக்கோட்டை

புதுகையில் 2 சிறுவா்கள் உள்பட5 பேருக்கு கரோனா தொற்று உறுதி

8th Jun 2020 07:51 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 2 சிறுவா்கள் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

பெங்களூருவில் இருந்து திருச்சி வந்த புதுகையைச் சோ்ந்த மென்பொறியாளருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இதைத்தொடா்ந்து, புதுகை நகா், அம்பாள்புரத்தில் வசித்துவரும் அவரது தந்தை (73), மனைவி (36) ஆகிய 2 பேரின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், அவா்கள் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. மேலும், விராலிமலை ராஜாளிப்பட்டியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண், சென்னையில் இருந்து அறந்தாங்கி அருகேயுள்ள மாங்குடிக்கு வந்த 12 மற்றும் 7 வயது சிறுவா்கள் ஆகிய 3 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இவா்கள் 5 பேரும் ராணியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 44 ஆக உயா்ந்துள்ளது. இதில், 21 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டாா். 15 போ் ராணியாா் மருத்துவமனையிலும், 5 போ் பழைய அரசு தலைமை மருத்துவமனையிலும், 2 போ் திருச்சி மகாத்மாநினைவு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT