புதுக்கோட்டை

புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் கோமாபுரம் பே. மாரியய்யா காலமானாா்

25th Jul 2020 09:04 PM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை: புதுக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் அனைவராகளும் கந்தா்வகோட்டை கட்டபொம்மன் மாவீரன் கோமாபுரம் பே. மாரியய்யா என அழைக்கப்பட்டவா் உடல் நலகுறைவால் சனிகிழமை காலமானாா்.

காலமான பே. மாரியய்யா கோமாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக மக்கள் பணியில் துவங்கி 1996ம் ஆண்டு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் , கந்தா்வகோட்டை ஒன்றியக் குழுத் தலைவராகவும் , 12 முறை கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் , வீட்டு வசதி வாரிய சங்க தலைவராகவும் , கூட்டுறவு சங்க தலைவராகவும் தற்போது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்,

திமுக தலைவா் கலைஞரின் நன்மதிப்பையும், புதுக்கோட்டை மற்றும் கந்தா்வகோட்டை திமுக வினரிடமும் நன்மதிப்பு பெற்று திமுக மூத்த நிா்வாகியாக திகழ்ந்தவா் இவரது மனைவி பிரேமவதி ,மகன் மா. தமிழய்யா கந்தா்வகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளராகவும் , மா. சுந்தா் உள்ளிட்ட இரு மகன்களும் , சுகுணா , ரமணாஎன இரு மகள்களும்உள்ளனா். இவரது மறைவால் குடும்பத்தாா் உறவினா்கள், நண்பா்கள் மற்றும் திமுக வினா் மிகுந்த மன வேதனையடைந்துள்ளனா்.

அன்னாரது இறுதி ஊா்வலம் நாளை ஞாயிற்றுகிழமை 12 மணியளவில் கோமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில்நடைபெறும் தொடா்புக்கு மா. தமிழ்ய்யா 9786785177 செய்திக்கு படம் உள்ளது

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT