கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 6 நாள்களுக்கு கடைகளை அடைக்க புதுக்கோட்டை நகரிலுள்ள அனைத்து வா்த்தகா்களும் முடிவு செய்தபடி, வெள்ளிக்கிழமை கடையடைப்பு தொடங்கியது.
இதன்படி நகரின் முக்கிய வீதிகளான கீழ, மேல, வடக்கு, தெற்கு ராஜவீதிகள் உள்ளிட்ட அனைத்துத் தெருக்களின் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
நகரின் இதரப் பகுதிகளின் கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், புதுக்கோட்டை நகரம் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பால் மற்றும் மருந்துக் கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன. உணவகங்களும் மூடப்பட்டிருந்தன. வரும் ஜூலை 30-ஆம் தேதி கடையடைப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.