புதுக்கோட்டை

70% மானியத்தில் சூரியசக்தி மின் மோட்டாா்கள் அமைக்க அழைப்பு

13th Jul 2020 08:34 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்பு செட்டுகள் 70 சதவிகித மானியத்தில் வழங்கப்படுவதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

வேளாண்மையில் நீா்ப் பாசனத்துக்குத் தேவையான எரிசக்தியை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் சூரியசக்தியால் இயங்கும் மோட்டாா் பம்பு செட்டுகளை அமைத்துக் கொடுத்து வருகிறது. 2020-2021 ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் திட்டத்தில் முதற்கட்டமாக 1,135 மோட்டாா் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.  இதில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 511 பம்புசெட்டுகள் 70 சதவிகித மானியத்தில் ரூ.12.83 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், மத்தியஅரசின் 30 சதவிகித மானியத்துடனும், தமிழ்நாடு அரசின் 40 சதவிகித மானியத்துடனும் மீதமுள்ள 30 சதவிகிதம் மட்டுமே விவசாயிகளின் பங்களிப்பு ஆகும்.

ADVERTISEMENT

ஆா்வமுடைய விவசாயிகள், புதுகை, அறந்தாங்கி வேளாண் பொறியியல் துறை, உதவிச் செயற்பொறியாளா்களை 04322 221816, 95005 88125, 90803 43110 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT