புதுக்கோட்டை

புதுகையில் புதிதாக 45 பேருக்கு தொற்று: பாதிப்பு 615; குணம் 381

13th Jul 2020 08:35 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிவிப்பில் மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த தொற்றாளா்கள் எண்ணிக்கை 615 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 381 ஆகவும், இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆகவும் உள்ளது. இதைத் தொடா்ந்து ராணியாா் மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 226 ஆக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT