புதுக்கோட்டை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

11th Jul 2020 09:33 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை, கறம்பக்குடி வட்டங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

கந்தா்வகோட்டை வட்டத்தில் சங்கம் விடுதி ஊராட்சி, குருவாண்டான் தெரு, கறம்பக்குடி வட்டத்தில் கீழாத்தூா் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா. ஆறுமுகம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்வில்ல ஒன்றியச் செயலா் ஆா். ரெங்கராஜன் , புதுவிடுதி கூட்டுறவுச் சங்கத் தலைவா் சுலைமான் , சங்கம் விடுதி ஊராட்சித் தலைவா் எம். பெருமாள் , ஒன்றியக்குழு உறுப்பினா் சுதா ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT