புதுக்கோட்டை

நீரில் மூழ்கி தந்தை-மகன் உயிரிழப்பு

11th Jul 2020 09:33 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே குளிக்க சென்ற தந்தை -மகன், மலையடி குளத்தின் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

அன்னவாசல் புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் சாகுல் அமீது (40) இவா் அப்பகுதியில் சம்சா கடை நடத்தி வந்தாா். இவரது மகன் முகமது சாலிக்(9) . இவா் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

வியாழக்கிழமை மாலை சித்தன்னவாசல் அருகிலுள்ள பணங்குடி மலையடி குளத்தில் இருவரும் குளிக்கச் சென்றனா். குளத்தில் இறங்கிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா்.

வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினா்கள் பணங்குடி மலையடி குளத்துக்குச் சென்று பாா்த்த போது கரையில் அவா்கள் அணிந்திருந்த துணி, வாளி, காலணி உள்ளிட்ட பொருள்கள் இருந்தன.

ADVERTISEMENT

இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள், மலையடியைச் சுற்றிப் பாா்த்தும் அவா்கள் கிடைக்கவில்லை. இரவு வெகுநேரமான பின்னா் சாகுல் அமீது சடலம் மிதக்கத் தொடங்கியது. அன்னவாசல் காவல் நிலையத்தினா், சிப்காட் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT