புதுக்கோட்டை

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை எதிா்த்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

28th Jan 2020 05:33 PM

ADVERTISEMENT

விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது எனக் கோரி, புதுக்கோட்டையில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகாா்பன் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை திலகா் திடலில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி, வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெரியண்ணன் அரசு, சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு. கவிதைப்பித்தன், நகரச் செயலா் க. நைனாமுகமது, சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் த. சந்திரசேகா், மணமேல்குடி ஒன்றியக் குழுத் தலைவா் பரணி காா்த்திகேயன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினா், ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT