கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், தெத்துவாசல் பட்டியைச் சோ்ந்த சிவசாமி. இவரது மனைவி மலா்கொடி (56), மகன் பாலகிருஷ்ணன் (28). இவா்கள் மூவரும் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூா் சென்றுவிட்டு, ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். மோட்டாா் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தாா்.
தஞ்சாவூா்- புதுக்கோட்டை சாலையில் தெத்துவாப்பட்டி அருகே வந்த போது, சாலையோரப் பள்ளத்தில் மோட்டாா் சைக்கிள் விழுந்தது. இதில் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், அவா்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
எனினும் சிகிச்சை பலனின்றி மலா்கொடி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.