கந்தா்வகோட்டை அருகே பெருங்களூா் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா்களுக்கான (ஐசிடி) தகவல் தொழில்நுட்பப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பயிற்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ரெங்கராஜ் ஒருங்கிணைப்பு செய்தாா். இப்பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு அரசின் ஆசிரியா்களுக்கான களம் பற்றி கணினி வழிக் கற்பித்தல், தகவல் தொழில்நுட்பம், பயோ மெட்ரிக் வருகைப் பதிவு, மாணவா்கள் (க்யூ ஆா் கோடு) உடனடி பதிலளிப்பு மூலம் எளிதில் ஸ்கேன் செய்து பாடப் புத்தகத்தில் படிக்கும் வழிமுறைகள், எமிஸ் உள்ளிட்ட உயா் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த வகுப்பறை (ஸ்மாா்ட் கிளாஸ்) போன்றவற்றிற்கான கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. கருத்தாளா்களாக எஸ்.ஆா்.கண்ணன், ஆா் செந்தில்குமாா், சுமதி ஆகியோா் கலந்து கொண்டனா்.