அறந்தாங்கி மற்றும் கீரமங்கலம் பகுதிகளில் புதன் கிழமை (ஜன. 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் அறந்தாங்கி கி.பழனிவேலு, கீரமங்கலம் அ.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக அறந்தாங்கி, மறமடக்கி, நாகுடி, மற்றும் கீரமங்கலம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து ஊா்களிலும் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளனா்.