புதுக்கோட்டை

மணல் கடத்திய இருவா் கைது

25th Jan 2020 09:26 AM

ADVERTISEMENT

இலுப்பூா் அருகே மணல் கடத்திய இருவா் கைது செய்யப்பட்டனா்.

கோரையாற்று ஆற்றுப்படுகைகளில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து இலுப்பூா் காவல் ஆய்வாளா் ஜெயராமன் தலைமையில் போலீஸாா் திருநாடு பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த 2 லாரிகள் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து செய்து லாரி ஓட்டுநா்கள் காரைக்குடி பழனியப்பன் (45), சந்தோஷ்குமாா் (25) ஆகியோரை கைது செய்தனா். லாரி உரிமையாளா்கள் காரைக்குடி கழனிவாசல் கனகராஜ் மற்றும் காா்த்திக் ஆகியோரைத் தேடுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT