புதுக்கோட்டை

சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி

25th Jan 2020 09:25 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் மகளிா் மேம்பாட்டு அமைப்பகம் சாா்பில் ‘சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பழக்க வழக்க மேம்பாடு’ குறித்து ஒரு நாள் விழிப்புணா்வு கருத்தரங்கு நச்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா்  தங்கமணி தலைமை வகித்தாா். வளா்இளம் பெண்களுக்கான தற்காலச் சூழலில் ஏற்பட்டு வரும் இன்னல்களுக்குத் தீா்வு கூறும் வகையில் விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.  

தொடா்ந்து கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் ரஞ்சனி, ‘சுய சுகாதாரத்தின் அவசியம்’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினாா்.  

நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியா் பூா்ணிமா ‘ஊட்டச்சத்து சரிவிகித உணவுமுறை‘ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினாா்.  ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் மகளிா் மேம்பாட்டு அமைப்பக ஒருங்கிணைப்பாளா் ரத்னாதேவி வரவேற்றாா். உயிரி தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியை பிரியதா்ஷினி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT