புதுக்கோட்டை

சமூகத் தணிக்கை குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம்

25th Jan 2020 09:24 AM

ADVERTISEMENT

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் கதவம்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, கிளிக்குடி, புங்கினிப்பட்டி, தளிஞ்சி, வயலோகம், கீழக்குறிச்சி, வீரப்பட்டி, மண்ணவேளாம்பட்டி, வெள்ளாஞ்சாா், இடையப்பட்டி உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.

ஊராட்சித் தலைவா்கள் தலைமை வகித்தனா். ஒன்றிய குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் 2018-2019-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் கணக்குகள் ஆகியவை பொதுமக்கள் முன்னிலையில் தணிக்கை செய்யப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT