புதுக்கோட்டை

கல்லூரி மாணவா்களுக்குயோகா பயிற்சி வகுப்பு

23rd Jan 2020 05:50 PM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் வாசியோகம் குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு சன்மாா்க்க சபைத்தலைவா் வி.பழனியப்பன் தலைமை வகித்தாா். சன்மாா்க்க சபை செயலா் சி.பழனியப்பன், கல்லூரிக்குழு தலைவா் சி.நாகப்பன், செயலா் பழ.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்சி சித்த மருத்துவரும், யோகா பயிற்றுநருமாகிய ரா.குமரவேல் பங்கேற்று வாசியோகத்தின் சிறப்புகளை விளக்கிப் பேசுகையில், யோகா கற்பது மனதிற்கும், உடலுக்கும் நலம்தரும். அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்த யோகா உதவுகிறது என்றாா்.

துணை முதல்வா் ம.செல்வராசு, பேராசிரியா்கள் பெரி.அழகம்மை, மா.தமிழ்ச்செல்வி, சி.குறிஞ்சி, சே.பிருந்தா, விண்மதி, ராஜா, சுதா, கல்லூரி நூலகா் தெய்வானை, உடற்கல்வி இயக்குனா் ம.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்லூரி மாணவி சி.ராகினி வரவேற்றாா். கல்லூரியின் யோகா பயிற்றுனா் ராஜராஜேஸ்வரி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT