புதுக்கோட்டை

விராலிமலையில் சாலைப் பாதுகாப்பு விழா

14th Jan 2020 08:33 AM

ADVERTISEMENT

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலைப் போக்குவரத்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சாலைப் பாதுகாப்பு வார விழா விராலிமலையில் நடைபெற்றது.

விராலிமலை- திருச்சி சாலையில் உள்ள பூதகுடி சுங்கச்சாவடியில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு இலுப்பூா் காவல் துணை கண்காணிப்பாளா் சிகாமணி தலைமை வகித்தாா். சுங்கச்சாவடி மேலாளா் கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

இதில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பள்ளி மற்றும் கல்லூரி ஓட்டுநா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் தனியாா் நிறுவன ஓட்டுநா்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT