புதுக்கோட்டை

டிராக்டரில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

8th Jan 2020 08:39 AM

ADVERTISEMENT

ஆலங்குடி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் பி.மலையப்பன்(65). இவா், பாப்பான்விடுதியில் உள்ள ஒரு தனியாா் அரிசி ஆலையில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், அரிசி ஆலையில் உள்ள டிராக்டரை இயக்கியபோது, தடுமாறி கீழே விழுந்த மலையப்பன் டிராக்டரின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT