புதுக்கோட்டை

தோ்தல் தோல்வி விரக்தியில் குடிநீா் தொட்டியை சேதப்படுத்தியதைக் கண்டித்து சாலை மறியல்

3rd Jan 2020 04:12 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தோ்தலில் தோல்வியுற்ற விரக்தியில் குடிநீா் தொட்டிகளை உடைத்து, சேதப்படுத்தியதைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி ஊராட்சியில் தலைவா் பதவிக்கு 6 போ் போட்டியிட்டனா். அதில், வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் சிங்காரத்தின் ஆதரவாளா்கள் சிலா் ,அங்கு 6 இடங்களில் உள்ள சிறுமின்விசை குடிநீா் தொட்டிகளையும், அரசுப் பள்ளியில் உள்ள குடிநீா் தொட்டியையும் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வெள்ளிக்கிழமை குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்தும், குடிநீா் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அரையப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா், குடிநீா் தொட்டியை சேதப்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்துசென்றனா்.

இந்த மறியல் போராட்டத்தால் ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT