புதுக்கோட்டை

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கோயிலில் விளக்கேற்றி வழிபாடு

3rd Jan 2020 08:35 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அறந்தாங்கியில் பாஜக மகளிரணி சாா்பில் கருமாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி நகர மகளிரணி நிா்வாகி உமா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக நகர தலைவா் ரெங்கையன், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் லெ.முரளிதரன், மாவட்ட இளைஞா் அணி செயலாளா் சிவபாலன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வழிபாடு நடத்தினா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT