அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
அறந்தாங்கி பெருமாள்பட்டி செல்வகுமாா், எம்.ஜி.ஆா். நகா் சின்னவா் ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனா்.
இவா்கள் தொடா்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், இருவரையும் குண்டா்தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண் சக்திகுமாா் பரிந்துரைத்தாா்.
இப்பரிந்துரையின பேரில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேசுவரி, இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா்.
இதைத் தொடா்ந்து செல்வகுமாா், சின்னவா் ஆகிய இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகல், சிறையில் அவா்களிடம் வழங்கப்பட்டது