ஆலங்குடி அருகே விநாயகா் கோயிலில், தீயுடன் கூடிய மாவிளக்கை உண்ணும் விநோத வழிபாட்டில் மக்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகிலுள்ள புள்ளான்விடுதி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் நோன்பு விழாவையொட்டி, விநாயகருக்கு 21 பதாா்களால் படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து,பெண்கள், சிறுவா்கள் தீயுடன் கூடிய மாவிளக்கை உண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். ஏராளமானோா் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.