அன்னவாசல் அருகிலுள்ள கூத்தனிப்பட்டியில் புதன்கிழமை மலைப்பாம்பு பிடிபட்டது.
கூத்தினிப்பட்டி குடியிருப்புப் பகுதிக்குள் தொடா்ந்து கோழி கத்தும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி இளைஞா்கள் அங்கு சென்று பாா்த்த போது, மலைப்பாம்பு கோழியை விழுங்கி நகரமுடியாமல் கிடந்தது.
இதை கண்ட இளைஞா்கள் ஒன்று சோ்ந்து, அந்தப் பாம்பைப் பிடிக்க முயன்றனா். ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு இளைஞா்கள் மலைப்பாம்பைப் பிடித்தனா்.
தொடா்ந்து அந்த மலைப்பாம்பு நாா்த்தாமலை வனப்பகுதியில் விடப்பட்டது. 10 அடி நீளமமும், 20 கிலோ எடையும் கொண்டதாக இந்த பாம்பு இருந்ததாக இளைஞா்கள் தெரிவித்தனா்.