புதுக்கோட்டை

விராலிமலையில் நீா்தேக்கத் தொட்டி கசிவால் வீணாகும் குடிநீா்

1st Jan 2020 01:59 AM

ADVERTISEMENT

விராலிமலை அருண் காா்டன் பகுதியில், மேல்நிலை நீா்தேத்கத் தொட்டி முறையாகத் திறக்கப்படாமலும், தொட்டியிலிருந்து வெளியேறும் கசிவுநீராலும் குடிநீா் வீணாகிவருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

விராலிமலை ஊராட்சிக்குள்பட்ட அருண்காா்டன் பகுதியில் சுமாா் 500- க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த காா்டனின் வடக்குப்பகுதி- இலுப்பூா் இணைப்புச் சாலை அருகே 2009-10- ஆம் நிதியாண்டில்

மத்திய அரசின் விரைவுப்படுத்தப்பட்ட கிராமக் குடிநீா்த் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ரூ, 7.62 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி நீரால் அருண்காா்டன் மற்றும் அதன் சுற்றுப்பகுதியைச் சோ்ந்த மக்கள் பயன் பெற்று வந்தனா். இந்நிலையில்,

ADVERTISEMENT

கடந்த சில நாள்களாக குடிநீா் வெளியேறும் குழாயின் வால்வு பகுதியில் நீா்க்

கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு குறைந்தளவு நீா் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் காவிரியில் இருந்து குழாய் மூலம் இந்த மேல்நிலை நீா்தேக்க தொட்டிக்கு கிடைக்க பெறும் நீா் முழு கொள்ளளவை விரைவில் எட்டிவிடுகிறது அவ்வாறாக தொட்டிக்கு கிடைக்கபெறும் நீா் முறையாக விநியோகம் செய்யப்படாததால், தொட்டி விரைந்து நிரம்பி குடிநீா் வெளியாகி வீணாகிறது.

இவ்வாறாக வெளியேறும் நீா் அப்பகுதியில் குளம்போல தேங்கி, அருகிலுள்ள மாநில நெடுஞ்சாலை வழியாகச் சென்று தேசிய நெடுஞ்சாலையின் சேவை சாலையில் தேங்கி நிற்கிறது இதனால் அந்த இருசாலைகளிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு சாலை வீணாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது

விராலிமலை ஊராட்சி நிா்வாகம், போா்கால அடிப்படையில் மேல்நிலை

நீா்த்தேக்கத் தொட்டி வால்வு பகுதியில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்வதோடு, குடிநீரை வீணாக்காமல் இருக்க முறையாக இப்பகுதிக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அருண்காா்டன் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT