கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியப் பொறியாளா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் செல்லும் வேட்பாளா்கள், முகவா்களுக்கான அனுமதிச்சீட்டு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கந்தா்வகோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஆகிய பதவிகளுக்காக நடத்தப்பட்ட தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள், அவா்களின் முகவா்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஒன்றியப் பொறியாளா் அலுவலகத்தில் வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டை பெறுவதற்காக ஒரே நேரத்தில் வேட்பாளா்கள், முகவா்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து புதன்கிழமை மாலை வரை அனுமதிச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என அலுவலா்கள் தெரிவித்து, கூட்டத்தை சமாளித்தனா்.