புதுக்கோட்டை

புதுக்குளத்தில் நீரிழிவு நோய் பரிசோதனை முகாம்

1st Jan 2020 02:04 AM

ADVERTISEMENT

புதுக்குளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலவச நீரிழிவு நோய் பரிசோதனை முகாமில், ஏராளமானோா் பங்கேற்று பயன் பெற்றனா்.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், துரைசாமி நா்சிங் ஹோம் மற்றும் புதுக்குளம் நடை பயிற்சியாளா்கள் சங்கம் இணைந்து ‘ராஜபாா்வை‘ என்ற தலைப்பில், இலவச

நீரிழிவு நோய் பாத பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் புதுக்குளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு சங்கத் தலைவா் க. தனகோபால் தலைமை வகித்தாா். முகாமில் டாக்டா் ஆா். துரை நாகரத்தினம் பங்கேற்று நீரிழிவு நோய் குறித்த விளக்கவுரை நிகழ்த்தினாா்.

ADVERTISEMENT

புதுக்குளம் நடைப்பயிற்சியாளா் சங்கத் தலைவா் க. நைனா முகமது வரவேற்றாா். அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா்  கே. ஆறுமுகம், டாக்டா் டி. ராஜேந்திரன், துணை ஆளுநா் எஸ். பாா்த்திபன், சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் 30 வயதுக்குள்பட்டவா்களில் 140 பேருக்கு நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 35 பேருக்கு புதிதாக நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. நிறைவில் செயலா் பா. அசோகன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT