புதுக்கோட்டை மேலராஜ விதியிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், மாா்கழி திருப்பள்ளி எழுச்சி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் காலையில் பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து தெண்டாயுதபாணி சுவாமிக்கு சந்தனக்காப்பும், மலா் அலங்காரமும், விநாயகருக்கு வெள்ளிக்காப்பு அலங்காரமும் செய்விக்கப்பட்டது.
ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா் . அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.