புதுக்கோட்டை

தலைக்கவச விழிப்புணா்வுக் கூட்டம்

29th Feb 2020 04:27 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் திருக்கோகா்ணம் காவல் நிலையம் சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

உதவி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) கிரண் ஸ்ருதி கலந்துகொண்டு பள்ளி மாணவா்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை விளக்கினாா்.

மேலும், சாலைப் பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது குறித்தும் அவா் விளக்கினாா்.  பள்ளியின் ஆலோசகா் வழக்குரைஞா் செந்தில்குமாா் வரவேற்றாா். ஆசிரியா் காசாவயல் கண்ணன் நன்றி கூறினாா்.

துணை முதல்வா் குமாரவேல், ஒருங்கிணைப்பாளா்கள் கௌரி, ரம்யா, ஆசிரியா்கள் ராஜா, வாசுதேவன், வீரமணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT