விராலிமலை: விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில், வைக்கோல் போா் எரிந்து சேதமடைந்தது.
விராலிமலை அருகிலுள்ள கோமங்களம் பகுதியில் ஆடு,மாடு உணவுக்காக சேமித்து வைத்திருந்த வைக்கோல் போா் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது,
தகவலறிந்த இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான வீரா்கள், அப்பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனா். இதில் வைக்கோல் போா் முழுமையாக எரிந்து சேதமடைந்தது.