ஆலங்குடி: கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில், செவ்வாய்க்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான முளைப்பாரித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வீட்டில் நவதானியங்களைக் கொண்டு வளா்த்த முளைப்பாரிகளை ஊா்வலமாகக் கொண்டு சென்று குளத்தில் விட்டனா்.
இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் திருவிழாவில் பங்கேற்றனா்.