புதுக்கோட்டை

விராலிமலையில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

26th Feb 2020 09:44 AM

ADVERTISEMENT

விராலிமலை: விராலிமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் சாா்பில், மாணவா்கள் சோ்க்கை மற்றும் வருகை பதிவை அதிகப்படுத்தும் விதமாக விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை விராலிமலை ஊராட்சித் தலைவா் எம். ரவி தொடக்கி வைத்தாா். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியிலேயே நிறைவடைந்தது.

பேரணியில் பள்ளித் தலைமையாசிரியா் ஆா். கோபால், விராலிமலை ஊராட்சித் துணைத் தலைவா் சி. தீபன்சக்கரவா்த்தி, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்தும் வகையிலான விழிப்புணா்வு முழக்கங்களை பேரணியில் சென்றவா்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT