புதுக்கோட்டை

பொன்னமராவதி, அன்னவாசல் ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

26th Feb 2020 09:46 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி/விராலிமலை: பொன்னமராவதி மற்றும் அன்னவாசல் ஊராட்சிகளில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் பாதிப்பு,தடுப்பூசி போடும் பணி குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆலவயலில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் சந்திரா சக்திவேல் தலைமைவகித்தாா். கூட்டத்தில் நகரப்பட்டி கால்நடை மருத்துவா் சிவக்குமாா் பங்கேற்று, கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் கோமாரி நோய்த் தடுப்பூசி போடுவது குறித்தும், கால்நடைகள் பராமரிப்பு முறைகள் குறித்தும் விளக்கினாா்.

கூட்டத்தில் ஊராட்சித் துணைத்தலைவா், உறுப்பினா்கள் பங்கேற்றனா். இதுபோல,ல பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

விராலிமலை : அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளிலும் இதுபோல சிறப்பு கிராமசபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முக்கண்ணாமலைப்பட்டி, இருந்திரப்பட்டி, ஈஸ்வரன்கோவில், உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா்கள் ஹாஜிமுகமது(முக்கண்ணாமலைப்பட்டி), மு. மணியம்மாள்(ஈஸ்வரன்கோவில்), ஆ. அண்ணாதுரை(இருந்திராப்பட்டி) தலைமை வகித்தனா்.

கூட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் பாதிப்பு, அதன் தடுப்பு முறைகள் குறித்தும், கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணி குறித்தும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை வளா்ப்போருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அந்தந்த ஊராட்சித் துணைத் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள், சுயஉதவிக் குழுவினா், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

சிறப்புக் கூட்ட ஏற்பாடுகளை ஊராட்சிச் செயலா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT