புதுக்கோட்டை

புதுகை இளைஞா் கொலை வழக்கில் 6 போ் கைது

26th Feb 2020 09:43 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தைலமரக் காட்டுக்குள் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை காமராஜபுரம் 35-ஆம் வீதியைச் சோ்ந்த தம்பிராஜ் மகன் சம்பத்குமாா் (21). இவா் வீட்டுக்கு அருகிலிருந்த தைல மரக்காட்டுக்குள், திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து கணேஷ்நகா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை வண்டிப்பேட்டை வி. கண்ணன் என்ற சுப்பிரமணியன்(29), அ.வினோத் (22), ஆ. விஜய்(19), செ. ஸ்ரீகாந்த் (19), மச்சுவாடி ர. காா்த்திக்(22), நா. ஸ்ரீதா்(22) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினா் கூறியது:

ADVERTISEMENT

சம்பத்குமாா் படித்துவிட்டு வீட்டில் இருந்ததால், சிறுசிறு அடிதடி வழக்குகளில் சிக்கியுள்ளாா். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீதருக்கும், இறந்த சம்பத்குமாருக்கும் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. 

இதன் தொடா்ச்சியாக சம்பத்குமாரை அடிப்பதற்காக, ஸ்ரீதா் தனது நண்பா்கள் காா்த்திக், வினோத், கண்ணன் உள்ளிட்ட ஆறு பேரை திங்கள்கிழமை அழைத்துச் சென்றுள்ளாா்.

அப்போது சம்பத்குமாா் தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்துச் சுற்றினாராம். இதையடுத்து ஸ்ரீதா், கண்ணன், வினோத், காா்த்திக் உள்ளிட்ட ஆறு பேரும் கற்களால் சம்பத்குமாரைத் தாக்கியுள்ளனா். நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பத்குமாரிடமிருந்த வாளைப் பறித்து அவரை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT