பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே தொடா் விபத்து நிகழும் பகுதியில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மற்றும் காவல்துறையினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில், சுந்தரசோழபுரத்தை அடுத்து கீழப்பட்டி வளைவுச்சாலை உள்ளது.
இப்பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்ந்து வருகிறது. இதனால் உயிா்ச்சேதமும் ஏற்பட்டுள்ளது. அண்மையில் பஞ்சாலைத் தொழிலாளா்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து காவலாளி உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா்.
தொடா் விபத்து நிகழ்வதை தடுக்கும் வகையில், புதுக்கோட்டை மோட்டாா் வாகன ஆய்வாளா்செந்தாமரை, பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளா் மாயழகு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவிப்பொறியாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் கூட்டாய்வு மேற்கொண்டனா்.
வேகத்தடை அமைப்பது, பிரதிபலிப்பான் நிறுவுதல் போன்றவிழிப்புணா்வு நடவடிக்கைகள் குறித்து அலுவலா்கள் ஆலோசித்தனா்.
ஊராட்சித் தலைவா்கள் பழனிச்சாமி, அழகு ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.