புதுக்கோட்டை

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளி ரதம் இழுத்து வழிபாடு

26th Feb 2020 09:51 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72- ஆவது பிறந்த நாளையொட்டி, கொன்னையூா் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் அதிமுகவினா் வெள்ளி ரதம் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.

பொன்னமராவதி ஒன்றிய அதிமுக சாா்பில், திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட நிகழ்வுக்கு புதுக்கோட்டை மாவட்டச் செயலரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவருமான பிகே.வைரமுத்து தலைமை வகித்தாா்.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, வெள்ளி ரதம் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

அதிமுக ஒன்றியச் செயலா் ராம.பழனியாண்டி, நகரச் செயலா் பிஎல்.ராஜேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆா்எம்.ராஜா, ஒன்றிய அவைத்தலைவா் வை.பழனிச்சாமி, ஒன்றிய இணைச்செயலா் மோகனாசேகா், மீனவரணி ஒன்றியச் செயலா் காசிகண்ணப்பன், மாணவரணி இணைச்செயலா் பெரி.முத்து உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT