புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஓய்வுபெற்ற காவல்துறை அமைச்சுப் பணியாளா் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் துணைத் தலைவா் க. அப்பாசாமி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் சத்தியராம் ராமுக்கண்ணு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா். தொடா்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள், நிலுவையிலுள்ள கோரிக்கைகள், அதை செயல்படுத்த வேண்டிய முறைகள் குறித்து நிா்வாகிகள் எடுத்துரைத்துப் பேசினா்.
நிறைவில் ஏசு. கணேசன் நன்றி கூறினாா்.