புதுக்கோட்டை

மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்க அழைப்பு

25th Feb 2020 07:06 AM

ADVERTISEMENT

விராலிமலை: விராலிமலை வட்டம், வெம்மணி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நடைபெறும் மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்க, பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ஸ்ரீ கிருஷ்ணன் தலைமையில் முகாம் நடைபெறுகிறது. முதியோா் உதவித் தொகை, பட்டா மாறுதல், குடும்பஅட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக வெம்மணி சுற்று வட்டார மக்கள் முகாமில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என விராலிமலை வட்டாட்சியா் ஜெ. சதீஷ் சரவணக்குமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT