புதுக்கோட்டை

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுபிரசுரம் வழங்கல்

25th Feb 2020 07:09 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி: பொன்னமராவதியில் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணா்வு துண்டுபிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

பாதுகாப்பான பயணம் குறித்த அறிவுரைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை அண்ணாசாலை, திருப்பத்தூா், கொப்பனாப்பட்டி, நாட்டுக்கல் சாலைகளில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் பிரான்சிஸ் மேரி தலைமையில் காவலா்கள் வழங்கினா்.

அண்ணாசாலையில் சரக்கு வாகனத்தில் ஆள்களை ஏற்றிச் சென்ற ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஓட்டுநா் மற்றும் வாகனத்தில் பயணித்த பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுபிரசுரங்களை காவல்துறையினா் வழங்கினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT