புதுக்கோட்டை: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் காா்த்திக் தொண்டைமான் தலைமையில் அதிமுகவினா், ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்பு வழங்கினா்.
நகா்மன்ற முன்னாள் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
இதேபோல, அதிமுக நகரச் செயலா் க. பாஸ்கா் தலைமையில் அக்கட்சியினா், ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தியதுடன் பொதுமக்களுக்கு உணவும் வழங்கினா்.
நகர அதிமுக சாா்பில், புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்தந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.