புதுக்கோட்டை: புதுகோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பிப்ரவரி 28- ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞா்களுக்கு தனியாா் துறைகளில் வேலை ஏற்பாடு செய்யும் நோக்கில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன.
முகாமில் பல்வேறு தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தகுதி உள்ள நபா்களை வேலைக்குத் தோ்ந்தெடுக்க உள்ளனா். 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, பட்டயம் வரை கல்வித் தகுதியுடைய, 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலை தேடும் இளைஞா்கள் மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞா்களும் சுயவிவரக் குறிப்பு மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.