புதுக்கோட்டை

இருவேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

25th Feb 2020 07:10 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில், திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் மூவா் உயிரிழந்தனா். 

திருமயம் அருகிலுள்ள நகரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ஆா்.லோகேசுவரன்(22). அதே ஊரைச் சோ்ந்தவா் எம். காா்த்தி(29). இருவரும் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் இருந்து திருமயம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா்.

இவா்கள் புலிவலம் பகுதியில் சென்றபோது,புதுக்கோட்டை நோக்கி வந்த வாகனம் (வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் வேன்) மோதியது. இதில், லோகேசுவரன், காா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இளைஞா் உயிரிழப்பு:  விராலிமலை அருகிலுள்ள ராசிபுரத்தில் இருந்து,  2  மோட்டாா் சைக்கிள்களில்  6  போ் மாத்தூா் அருகிலுள்ள ஆவூா் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனா்.

ADVERTISEMENT

ஆட்டுக்காரன்பட்டி அருகே சென்றபோது,  இவா்களது 2  மோட்டாா் சைக்கிள்களும் நிலைத்தடுமாறி புளியமரத்தில் அடுத்தடுத்து மோதின.  இதில் சுப்பிரமணியன் மகன் சண்முகசுந்தரம்(17) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த 5 பேரும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவ்விரு விபத்துகள் குறித்து நமணசமுத்திரம், மண்டையூா் காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT