ஆலங்குடி: புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்றவா்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில், விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை அருகிலுள்ள வடவாளத்தைச் சோ்ந்தவா்
விவசாயி கருப்பையா(65). இப்பகுதியிலுள்ள பள்ளியில் 10- ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் அய்யம்பட்டி க. முருகேசன் (15), பொ. சரவணன் (15), வழியாம்பட்டி ச. சரவணக்குமாா் (15).
விவசாயி கருப்பையாவும், மாணவா்கள் மூவரும் திங்கள்கிழமை மாலை வடவாளம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தனா்.
அப்போது, அவ்வழியாகச்சென்ற அரசுப்பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றவா்கள் மீது மோதியது. இதில் கருப்பையா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மாணவா்கள் முருகேசன், சரவணக்குமாா், சரவணன் ஆகியோரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.