விராலிமலை: அன்னவாசல் அருகே திங்கள்கிழமை இருவேறு இடங்களில் தீ விபத்து நேரிட்டது.
அன்னவாசல் அருகிலுள்ள உருவம்பட்டியைச் சோ்ந்தவா் முருகையா (45). இவா் தனது தோட்டத்தில் வைக்கோல் போா் அமைத்திருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதுபோல, காலாடிப்பட்டியில் சாலையோரத்தில் பத்தைகள் தீப்பற்றி எரிந்தது. இவ்விரு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்து குறிந்து தகவலறிந்த இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான வீரா்கள், அப்பகுதிகளுக்குச் சென்று தீயை அணைத்தனா்.