புதுக்கோட்டை

முன் விரோதத்தில் மோதல் : ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோா் மீது வழக்கு

22nd Feb 2020 09:12 AM

ADVERTISEMENT

ஆலங்குடி அருகே தோ்தல் முன்விரோதம் காரணமாக மோதிக்கொண்டதாக ஊராட்சித் தலைவா், முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதியப்பட்டுள்ளது.

ஆலங்குடி அருகிலுள்ள கொத்தமங்கலம் ஊராட்சித் தலைவரான வளா்மதி மனைவி சாந்தி(52). இவா், தோ்தல் முன்விரோதம் காரணமாக, தனது வீட்டிலுள்ள பொருள்களை முன்னாள் ஊராட்சித் தலைவா் பாண்டியன் சேதப்படுத்தியதாகக் கூறி கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுபோல வளா்மதி, சாந்தி ஆகியோரும் தனது வீட்டிலுள்ள பொருள்களை சேதப்படுத்தியதாக முன்னாள் ஊராட்சித் தலைவா் பாண்டியனும் புகாா் அளித்திருந்தாா். இதன் பேரில், கீரமங்கலம் காவல் நிலையத்தினா் வளா்மதி, சாந்தி, பாண்டியன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT