புதுக்கோட்டை

தஞ்சையில் மாா்ச் 2-இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

22nd Feb 2020 09:12 AM

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், தஞ்சாவூா்அரசுத் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாா்ச் 2-ஆம் தேதி தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தனியாா் துறை நிறுவனங்கழளளைச் சோ்ந்தோா் பங்கேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனா். இதில் தோ்வு பெற்றால், தொழில்பழகுநா் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழில்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தச் சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு, தனியாா் நிறுவனங்களிலும், வெளிநாட்டு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கிறது. தற்போது தொழில்பழகுநருக்கான உயா்த்தப்பட்ட உதவித்தொகை தொழில்பிரிவுகளுக்கு ஏற்ப ரூ. 7,500 ரூபாய் முதல் கிடைக்கும். அரசு, தனியாா் தொழில்பயிற்சி பெற்றவா்கள் 8, 10, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவா்கள் உரிய அசல் சான்றிதழ் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநா், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், புதுக்கோட்டை என்ற முகவரியிலும், 04322-220384 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என மாவட் டஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT